தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை


தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை
x

விவசாயி உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.

திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகா பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 50). விவசாயி. நேற்று முன்தினம் இவர் இறந்து விட்டார். அவரது உடலை, கல்கோட்டை அருகே உள்ள மயானத்தில் புதைக்க குழி தோண்ட முயன்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தாசில்தார் தலைமையில் இரு தரப்பை சேர்ந்தவர்களிடமும் பேச்சுவார்த்ைத நடத்தப்பட்டது.

அப்போது பட்டாநிலத்தின் வழியாக மயான ஊர்வலம் வரக்கூடாது என்று கல்கோட்டை கிராம மக்களும், வழக்கமாக புதைக்கக்கூடிய கல்கோட்டை மயானத்தில் தான் உடலை அடக்கம் செய்வோம் என்று பிள்ளையார்நத்தம் கிராம மக்களும் தெரிவித்தனர். இதற்கிடையே பேச்சுவார்த்தை முடிவில், கல்கோட்டை பகுதியில் உள்ள மயானத்தில் தங்கபாண்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story