வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்


வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 7:30 PM GMT (Updated: 22 Dec 2022 7:30 PM GMT)

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:-

கெலமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தலட்சுமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்து உடனடியாக செய்துமுடிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் அடுத்த மாதம் (ஜனவரி) மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.. கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள் முருகேசன், தமிழ், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சம்பங்கி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், உதவியாளர் கனிமொழி, ஒப்பந்ததாரர்கள் மாரப்பன், மாதேஷ், ஸ்ரீராமன், நாகரத்தினா கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story