இளையான்குடி பகுதியில் -மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் தாக்குதல்


இளையான்குடி பகுதியில் -மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி பகுதியில் மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் தாக்கம் உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி பகுதியில் மிளகாய் செடியில் இலை சுருட்டல் நோய் தாக்கம் உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் தாக்கம்

இளையான்குடி வட்டாரத்தில் சுமார் 2800 எக்டேர் பரப்பளவில் மிளகாய் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தோட்டக்கலை துறையின் மூலம் பல்வேறு கிராமங்களில் வேளாண்மை துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்தபோது இலை சுருட்டல் நோய் பாதிப்பு அதிக அளவில் காணப்படுவது தெரியவந்தது.

இலை சுருட்டல் என்பது இலைகள் பின்னோக்கி படகு போல் வளைந்து சுருங்கி காணப்படும்.

இந்த இலை சுருட்டல் நோய் காலநிலை மாறுபாடுகளால், பூச்சிகளின் தாக்கத்தால் அதிக அளவு தென்படுகிறது. இதனால் அடுத்தடுத்து காய் பறிப்பின்போது விளைச்சல் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாக்கும் வழி

எனவே மிளகாய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கீழ்கண்ட மருந்தினை பயன்படுத்தி நோய் தாக்கத்திலிருந்து மிளகாய் செடிகளை பாதுகாக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி புப்ரோபெசின் 25 எஸ்.சி. 8 மில்லி, 10 லிட்டர் தண்ணீர், டையாபென்தூரியான் 50wp, 1 லிட்டர் தண்ணீர், ஸ்பைரோமிசிபென் 22.9 எஸ்.சி.5 மில்லி, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Next Story