கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி


கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி
x

கொள்ளிடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. மேலும் சிறப்பு முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. மேலும் சிறப்பு முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு நாதல் படுகை, முதலை மேடு திட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பயிரிடப்பட்ட தோட்டப்பயிர் மற்றும் நெல் பயிர்கள், பருத்தி உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டன.வீடுகளை தண்ணீர் சூழ்ந்து சுவர்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படடன. தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் வீடுகளின் தரை ஈரப்பதமாக இருப்பதால் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிக்கும் பணி

இந்த நிலையில் ஆணைக்கரைசத்திரம் ஊராட்சி சுகாதாரத் துறை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதில் தண்ணீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்ததும், பள்ளிக்கூடம், மக்கள் வசிக்கும் இடங்கள், கோவில்கள் உள்ளிட்ட பகுதியில் கொசுமருந்து தெளிக்கப்பட்டது.கிராம பகுதிகளில் வெள்ளத்தினால் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.அதனை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேதம் அடைந்த மின்கம்பங்களையும் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு முகாம்

சுகாதாரத் துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதில் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவபிரகாசம், சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story