காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்..!


காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்..!
x
தினத்தந்தி 22 April 2023 9:06 AM IST (Updated: 22 April 2023 9:14 AM IST)
t-max-icont-min-icon

காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்த காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து சமூக வலைதளத்தில் மீம் வீடியோ வெளியிட்ட தலைமை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதனை விமர்சிக்கும் வகையில் நேற்று மாலையில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றக்கூடிய பாலமுருகன் என்பவர் மீம் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமை காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Next Story