போலி பள்ளி மாற்று சான்றிதழ் கொடுத்து மோசடி அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்


போலி பள்ளி மாற்று சான்றிதழ் கொடுத்து மோசடி அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்
x

போலி பள்ளி மாற்று சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

கும்மிடிப்பூண்டி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாளராக சந்தோஷ் மேரி என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சந்தோஷ் மேரி கொடுத்த கல்வி மாற்று சான்று உண்மை தன்மையற்றது என பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்தார்.

இதுகுறித்த விசாரணையில் சந்தோஷ் மேரி கொடுத்தது போலி கல்வி மாற்று சான்று என உறுதியானது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவரை பயியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அரசு விதிமுறைகளை பின்பற்றி சந்தோஷ் மேரியை பணியில் இருந்து விடுவித்து அதன் விவரத்தினை அலுவலகத்திற்கு தெரிவிக்கும்படியும் கும்மிடிப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு அறிவுறுத்தியுள்ளார்.


Next Story