டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்
x

டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்

நாகப்பட்டினம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சித்தம்பாடி கிராமத்தில் இயங்கி வரும் மதுபான சில்லறை விற்பனை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருபவர் அருள்தாசன். இவர், டாஸ்மாக் கடையில் உள்ள மதுபானங்களை மொத்தமாக வெளிநபர்களிடம் கொடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் அவர் வெளிநபர்களிடம் மதுபானங்களை மொத்தமாக கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அருள்தாசனை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக நாகை மாவட்ட மேலாளர் சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story