நீலகிரியில் 160 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு


நீலகிரியில் 160 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 4:00 AM IST (Updated: 11 Jun 2023 4:00 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் 160 பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கூடலூர்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த 7-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி 6 முதல் 12-ம் வகுப்பு வரை நாளை (திங்கட்கிழமை), 1 முதல் 5 வரை 14-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் படிப்பதற்காக பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரியில் குன்னூர் கல்வி மாவட்டத்தில் 120 பள்ளிகள், கூடலூர் கல்வி மாவட்டத்தில் 40 பள்ளிகள் என மொத்தம் 160 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


Next Story