கண்மாயில் கொட்டப்பட்ட கழிவு மண் அகற்றம்


கண்மாயில் கொட்டப்பட்ட கழிவு மண் அகற்றம்
x

கண்மாயில் கொட்டப்பட்ட கழிவு மண் அகற்றம் செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி- விருதுநகர் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் உறிஞ்சி குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரங்களும், முட்புதர்களும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இதனால் மழைக்காலங்களில் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வீணாகி வந்தது. இந்தநிலையில் தனியார் அமைப்பு சார்பில் கண்மாய், வரத்துக் கால்வாய் துார்வாரும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கண்மாய்க்குள் கழிவு குப்பைகள், மண் போடப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் முக்கிய பிரமுகர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் கண்மாய் பகுதியில் கொட்டப்பட்ட கழிவு மண்ணை உடனடியாக அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை மணல் அள்ளும் எந்திரம் மூலம் கண்மாய்க்குள் கொட்டப்பட்டிருந்த கழிவு மண்ணை அதிகாரிகள் அகற்றினர்.


Next Story