சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்


சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்
x

சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் அறிவுறுத்தினர்.

கரூர்

கரூர்,

மாநகராட்சி கூட்டம்

கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் அதன் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கவிதா தலைமை தாங்கினார். துணை மேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 220 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. காந்திகிராமம், பசுபதிபாளையம் பகுதிகளில் மினி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுவதால் குண்டும், குழியுமாக மாறிய சாலைகளை சரிசெய்ய வேண்டும், கரூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதை தடுக்க வேண்டும்,

குடிநீர் பிரச்சினை

வெங்கமேடு பகுதியில் சாக்கடை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனால் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரிசெய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், சாலையோரங்களில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள் அகற்றி விட்டு மீண்டும் அந்த இடத்தில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கவுன்சிலர்கள் பேசினர். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பதில் அளித்தனர். இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Next Story