தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; வாலிபர் கைது


தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு; வாலிபர் கைது
x

மூலைக்கரைப்பட்டி அருகே தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டி:

மூலைக்கரைப்பட்டி அருகே பருத்திப்பாடு செல்வநகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி அமிர்தலட்சுமி (வயது 47). இவரது மகள் சரண்யா (27). இவர்கள் அங்குள்ள பொதுநல்லியில் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும், அதே ஊரைச்சேர்ந்த விஜயகுமார் மனைவி குசலகுமாரி (44) என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த குசலகுமாரியின் மகன் நாகராஜ் (29) என்பவர் சரண்யா மீது மோட்டார்சைக்கிளை கொண்டு மோதியதாக கூறப்படுகிறது. மேலும் அமிர்தலட்சுமி, சரண்யா ஆகியோரை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மோட்டார்சைக்கிள் மோதியதில் காயமடைந்த சரண்யா சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப்பதிவு செய்தார். நாங்குநேரி துணை சூப்பிரண்டு ராஜூ விசாரணை நடத்தி நாகராஜை கைது செய்தார். குசலகுமாரியை தேடி வருகிறார்.

1 More update

Next Story