மரம் வெட்டியதில் தகராறு; ஒருவர் காயம்


மரம் வெட்டியதில் தகராறு; ஒருவர் காயம்
x

மரம் வெட்டியதில் தகராறு; ஒருவர் காயமடைந்தார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னகருப்பன் (வயது 40). இவரது வீ ட்டின் அருகில் ஒரு பப்பாளி மரம் இருந்தது. இதன் அருகில் உள்ள வீட்டில் வெற்றிவேல் (44), அவரது மனைவி தனலட்சுமி (40) ஆகியோர் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் வெற்றிவேல், அவரது மனைவி ஆகியோர் அந்த மரத்தை வெட்டி உள்ளனர். மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள் என்று சின்னகருப்பன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தனலட்சுமி, சின்னகருப்பனை கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story