டிபன் கடை உரிமையாளருடன் தகராறு: மனித உரிமை ஆணையத்தில் பெண் புகார்
டிபன் கடை உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு குறித்து மனித உரிமை ஆணையத்தில் பெண் புகார் அளித்தார்.
புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி இந்துவதனம். இவர் மாநில மனித உரிமை ஆணையம், தமிழக டி.ஜி.பி., புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட 5 அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், எனது வீட்டின் அருகே டிபன் கடை நடத்தி வருபவருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தேன். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் என்னையும், எனது கணவரையும் டிபன் கடை உரிமையாளர் உள்பட சிலர் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் என்னையும், எனது கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story