மனைவியிடம் தகராறு; கூலித் தொழிலாளி கைது


மனைவியிடம் தகராறு; கூலித் தொழிலாளி கைது
x

மனைவியிடம் தகராறு செய்த கூலித் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ராஜலட்சுமி. பரமசிவன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து, வீட்டு செலவிற்கு பணம் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜலட்சுமி பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று மாமியார் வீட்டிற்கு சென்ற பரமசிவன் கல்லால் வீட்டில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்ததுடன் உள்ளே அத்துமீறி நுழைந்து மனைவியின் முடியை பிடித்து தர தரவென இழுத்து வந்து அருகே கிடந்த கத்திரிக்கோலை கொண்டு குத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜலட்சுமி பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்ஸி வழக்குப்பதிவு செய்து பரமசிவனை கைது செய்தார்.


Next Story