ராகுல்காந்தி தகுதி நீக்கம்: கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை?
ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.பி., பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story