கோவில் திருவிழாவில் இடையூறு; 3 வாலிபர்கள் கைது


கோவில் திருவிழாவில் இடையூறு; 3 வாலிபர்கள் கைது
x

கோவில் திருவிழாவில் இடையூறு ஏற்படுத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சி மகன் கலைவாணன் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர்கள் கார்த்திக்(21), பார்த்திபன்(23). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நடைபெற்ற கல்லங்குறிச்சி கலியுகவரதராஜ பெருமாள் கோவில் விழாவில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story