விநாயகர் சிலைகள் கரைப்பு


விநாயகர் சிலைகள் கரைப்பு
x

நாகையில் 10 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

நாகப்பட்டினம்

நாகையில் 10 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

நாகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இந்த விநாயகர் சிலைகளை நேற்று பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைத்தனர்.

அதன்படி நாகை நகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 10 விநாயகர் சிலைகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

கடலில் சிலைகள் கரைப்பு

அங்கு விநாயகர் சிலைக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்பதற்காக திட்டமிட்டனர். ஆனால் அங்கு படகு வருவதற்கு காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் பக்தர்களிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் கையில் எடுத்து சென்று சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று பக்தர்கள் தெரிவித்தனர். இதனால் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர். பின்னர் படகு வந்ததும் அதில் சிலைகள் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.


Related Tags :
Next Story