விநாயகர் சிலைகள் கரைப்பு


விநாயகர் சிலைகள் கரைப்பு
x

வாலாஜாபேட்டையில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 9 இடங்களில் ‌விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று வி.சி.மோட்டூர் ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

வாலாஜாபேட்டை ஐயப்பன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று வி.சி.மோட்டூர் ஏரியில் தீயணைப்பு வீரர்கள் மூலம் கரைக்கப்பட்டன.

1 More update

Next Story