ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு


ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு
x

ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அங்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினாா்கள்.

ஈரோடு

ஈரோடு காவிரிக்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அங்கு ஆய்வு நடத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிலைகளின் மீது இருந்த மாலைகள், தோரணங்களை கழற்ற உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஈரோடு மாநகரில் பொதுமக்கள், தனியார் அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் நேற்று மாலை ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதித்து உள்ளது. எனவே விதிமுறைக்குட்பட்டு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறதா? என்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

களிமண் சிலைகள்

ஈரோடு மாவட்ட பொறியாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி பொறியாளர்கள் குணசேகரன், சந்தானகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதை பார்வையிட்டனர்.

விநாயகர் சிலைகளின் மீது போடப்பட்டு இருந்த மாலைகளுடன் சிலையை சிலர் கரைக்க முயன்றனர். அப்போது அவர்களை தடுத்த அதிகாரிகள், சிலையின் மீதுள்ள மாலை, தோரணங்களை கழற்றி வைக்க உத்தரவிட்டனர். மேலும், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே ஆற்றில் கரைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

1 More update

Related Tags :
Next Story