சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்


சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 24 April 2023 7:00 PM GMT (Updated: 24 April 2023 7:00 PM GMT)

கடையநல்லூர் நகராட்சியின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து கடந்த ஓராண்டில் மட்டும் அனைத்து வார்டுகளுக்கும் ரூ.12.93 கோடிக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளும், மக்களின் அத்தியாவசிய, அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் பணிகளுக்கான கல்வி நிதி மற்றும் குடிநீர் பொது நிதியில் இருந்து ரூ.6.57 கோடி மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.19.50 ேகாடிக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து நகராட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாரி ஜான், துணைத்தலைவர் ராசையா, சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர், ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேல், நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், கவுன்சிலர்கள் முருகன், அக்பர்அலி, முகைதீன் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story