பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
திருச்சி
திருச்சி:
சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தையொட்டி திருச்சி ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. இதில் திருச்சி பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டுகளில் ரெயில்வே பாதுகாப்பு படையின் கலை குழுவினர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அப்போது ரெயில்வே தண்டவாளங்களை கடக்கும்போது செல்போன்கள், ஹெட்போன்களை பயன்படுத்தவது போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும், ரெயில் நிலையங்களில் ரெயில் பாதைகளை கடக்க சுரங்கப்பாதைகள், நடைமேடை மேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும் என்றும், ரெயில்கள் கடந்து செல்வதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டிருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாய நெறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story