விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

தேசிய நுகர்வோர் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. கோத்தகிரி புளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், தேசிய நுகர்வோர் தின நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் பயணிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள், வினாடி-வினா போட்டிகள் கடந்த வாரம் நடத்தப்பட்டது.



Next Story