விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்


விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
x

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுக்க வந்தனர். அப்போது திருவாரூர் தாலுகா போலீஸ் நிலைய பெண் போலீசார் பொதுமக்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அந்த துண்டு பிரசுரத்தில், குழந்தை திருமணத்தை தடுத்திடுவோம், மகளின் மகிழ்ச்சியை மலர செய்வோம், உங்கள் பிள்ளைகளின் உரிமைகளை காப்பது உங்கள் கடமை, குழந்தை திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றம். புகார் செய்ய1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

1 More update

Next Story