தீ விபத்துகளை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
தீ விபத்துகளை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
வால்பாறை
வால்பாறையில் உள்ள தமிழ் நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீயணைப்பு பணியின் போது இறந்த தீயணைப்பு வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை தீத் தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி பிரகாஷ்குமார் தலைமையில் தீவிபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.
அதன்படி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீவிபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரி நிர்வாகம் நடத்த முன் வரவேண்டும். தீவிபத்து ஏற்பட்டு போது தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்க யாரும் மறக்க கூடாது. தீ விபத்து இல்லாத வால்பாறையை உருவாக்க தீத் தொண்டு வாரத்தில் உறுதி ஏற்க வேண்டும் என்று தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.