12 ஆயிரம் பேருக்கு வண்ண வாக்காளர் அட்டை வினியோகம்


12 ஆயிரம் பேருக்கு வண்ண வாக்காளர் அட்டை வினியோகம்
x

வேலூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் பேருக்கு வண்ண வாக்காளர் அட்டை வினியோகம் செய்யப்படுகிறது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைபெற விண்ணப்பித்தவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 12 ஆயிரத்து 808 பேர் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு புதிய வண்ண அடையாள அட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு வந்துள்ளது. இதனை தபால்துறை மூலம் சம்பந்தபட்டவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் மற்றும் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கு புதிய வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது. இந்த அட்டையில் கியூஆர் கோடு, ஹாலோகிராம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. வரப்பெற்ற அட்டைகள் தபால்துறை மூலம் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story