தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் வினியோகம்
ஆறுமுகநேரியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வினியோகம் செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் இரண்டு ெரயில் நிலையங்கள் உள்ளன. தற்போது நெல்லை- திருச்செந்தூர் இடையே மின்சார ெரயில்கள் சென்று வருகின்றன. ெரயில்வே தண்டவாளங்களுக்கு மிக அருகிலேயே குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. மின்சார ெரயில் என்ஜின் சத்தங்கள் மிக குறைவாக இருப்பதால் சிறுவர்களும், முதியோர்களும் தண்டவாளங்களை கடக்கும்போது ெரயிலில் அடிபடும் நிலைமை உள்ளது.
கடந்த வாரம் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும்போது ெரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் ெரயில் தண்டவாளங்கள் அருகில் குடியிருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவர்களுக்கும், முதியோர்களுக்கும் ஆறுமுகநேரி நகர தி.மு.க.வினர் செயலாளர் நவநீத பாண்டியன் தலைமையில் துண்டுபிரசுரங்களை வழங்கினர். நகர துணை செயலாளர்கள் முத்தீஸ்வரி, அகஸ்டின், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியம், மகளிர் அணி செயலாளர் அந்தோணிலதா, கவுன்சிலர் மாரியம்மாள் உள்பட பலர் சென்றனர்.