சொத்துவரி செலுத்தக்கோரி துண்டு பிரசுரம் வினியோகம்
காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சொத்துவரி செலுத்தக்கோரி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சொத்துவரி கட்டினால் ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் வசிப்பவர்கள் 2023-24-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்து வரியினை வருகிற 30-ந் தேதிக்குள் பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி 5 சதவீதம் அல்லது அதிகபட்சமான ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெறலாம் என்ற விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை காவேரிப்பாக்கத்தில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story