பா.ஜனதா சாதனை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம்


பா.ஜனதா சாதனை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம்
x

தூத்துக்குடி அருகே பா.ஜனதா சாதனை விளக்க துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த கண்ணையா என்பவருடைய மகன்கள் ராமநாதன், விஸ்வநாதன் என்ற இரு சகோதரர்களும் 12 மணி நேரம் இரு கைகளையும் கட்டி நீச்சல் அடித்து சமீபத்தில் உலக சாதனை படைத்துள்ளனர். அவர்களை பாராட்டும் விதமாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டும் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மண்டலம் சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சாதனையாளர் விருது, சாதனை படைத்த இரு சகோதரர்களுக்கும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முத்தையாபுரம் அனைத்து வார்டுகளிலும் மோடியின் 8 ஆண்டு சாதனை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி கலந்து கொண்டார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சத்தியசீலன், ராஜா, மாவட்ட துணை தலைவர்கள் சுவைதர், தங்கம், மாவட்ட செயலாளர் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாசனமுத்து தலைமையில் முடுக்குகாடு, ஊரணி ஒத்தவீடு, வீரநாயக்கன் தட்டு போன்ற கிராமங்களில் மக்களை சந்தித்து குறைகள் கேட்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டியல் அணி மாநில பொதுசெயலாளர் நாகராஜன், மாநில செயலாளர் சிவந்தி நாராயணன், பொருளாளர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தெற்கு மண்டல தலைவர் கே.மாதவன் செய்திருந்தார்.


Related Tags :
Next Story