மாவட்ட தடகள போட்டி


மாவட்ட தடகள போட்டி
x
தினத்தந்தி 3 Feb 2023 1:00 AM IST (Updated: 3 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எருமப்பட்டி:-

எருமப்பட்டி அருகே பவித்திரம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வலம்புரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி நடந்தது. போட்டியில் 13 பள்ளிகளில் இருந்து சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். அட்மா குழு தலைவர் பாலசுப்பிரமணியம் புறாக்களை பறக்க விட்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் கலந்து கொண்ட எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

மாலையில் நடந்த பரிசு வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ், கோப்பைகளை அட்மாகுழு தலைவர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பெருமாள்பட்டி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், பவித்திரம் கண்ணன், எருமப்பட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கவுசல்யா, விமல், மகாமுனி, வலம்புரி ஸ்போர்ட்ஸ் அகாடமி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story