மாவட்ட குழந்தைகள் நலன், பாதுகாப்பு குழு கூட்டம்


மாவட்ட குழந்தைகள் நலன், பாதுகாப்பு குழு கூட்டம்
x

திருவண்ணாமலையில் மாவட்ட குழந்தைகள் நலன், பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் மாவட்ட குழந்தைகள் நலன், பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

பாதுகாப்பு குழு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 3-ம் காலாண்டிற்கான மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் காவல்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, குழந்தை தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நலக்குழு, சிறுவர் நீதி குழுமம் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளை செய்யக்கூடிய அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குழந்தை திருமணம்

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழு செயல்பாடுகள் குறித்து கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், உரிமை மீறல்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பிச்சை எடுத்தல், கடத்தப்படுதல், பள்ளி இடைநின்றல், உடல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய பிரச்சினைகள் மீது துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குழந்தைகள் நல குழு, குழந்தைகள் உதவி எண் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story