கடலூரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு


கடலூரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
x

மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடலூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பாலசுப்பிரமணியன், கடலூர் மாவட்டத்தில் 278 இடங்கள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டு, அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 21 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும், தொடர்ந்து நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story