தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய அமைப்புசாரா தொழிலாளர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய அமைப்புசாரா தொழிலாளர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய அமைப்புசாரா தொழிலாளர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய அமைப்புசாரா தொழிலாளர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

அமைப்புசாரா தொழிலாளர்கள்

மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய www.eshram.gov.inஎன்ற தேசிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், மின்பிடி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், சிறு, குறு விவசாய தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள், ரிக்சா தொழிலாளர்கள், காய்கறி, பழ தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தச்சுவேலை செய்வோர். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், டீக்கடை தொழிலாளர்கள், கல்குவாரி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மற்றும் விபத்து ஊனத்துக்கான காப்பீடு பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தின் மூலம் பெறலாம். பதிவு பெற்ற தொழிலாளர்களில் 31.03.2022-க்குள் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இணைதளத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் யாரேனம் 31.03.2022-க்குள் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ அல்லது ஊனமடைந்து இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். 31.03.22-க்கு பிறகு யாரேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருந்தாலோ, ஊனம் அடைந்து இருந்தாலோ, அந்த தொழிலாளர்கள் அல்லது வாரிசுதாரர்கள், தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் உரிய ஆவணங்களுடன் இணைதளத்தில் விண்ணப்பித்து காப்பீட்டு தொகையை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் முதல் தளம், ஐ.டி.ஐ. வளாகம், சோரீஸ்புரம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-101, தொலைபேசி எண்: 0461-2340443 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story