சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம்


சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம்
x

சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சி.ஐ.டி.யூ. கரூர் மாவட்ட 11-வது ஆண்டு பேரவை கூட்டம் சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ெவங்கடபதி சிறப்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் பிச்சைமுத்து கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் வணிக வளாகம், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் குடோன்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வுக்கான ஒப்பந்த பேச்சு வார்த்தையை நடத்திட வேண்டும், கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ராஜாமுகமது, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story