இல்லம் தேடி கல்வி மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு


இல்லம் தேடி கல்வி மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
x

இல்லம் தேடி கல்வி மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வுசெய்தார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

இல்லம் தேடி கல்வி மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

பெரணமல்லூர் ஒன்றியம் மோட்வாடி கிராமத்தில் 5 இடங்களில் இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கிறார்களா, ஆசிரியைகள் முறையாக கற்றுத் தருகிறார்களா, மாணவ -மாணவிகளின் வாசிப்பு திறன், ஆங்கில வாசிப்பு திறன் ஆகியவை குறித்து பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன் ஆய்வு நடத்தினார். இல்லம் தேடி ஆசிரியைகள் தமிழரசி, தரணி, சுமிதா, சூர்யா, வனிதா, ஆசிரியைகளை நடத்தும் மையங்களில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அந்தப் பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய பாதிரியார் ஜெயக்குமாரும் சந்திதது பேசினார்.

மாணவர்களிடத்தில் சிறப்பாக படிக்க வேண்டும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று அப்போது வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் அறிவுரை வழங்கினார்.


Next Story