மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்


மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம்

விழுப்புரம்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா, மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெகதீசன், சுரேஷ், பவானி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், மோகன் வாழ்த்துரை வழங்கினர். மாநில தலைவர் அன்பரசன், அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பீட்டர்ராஜா, நடராஜன் உள்ளிட்டவர்கள் நினைவு பரிசுகளை வழங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அகவிலைப்படி உயர்த்திய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க..ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு மற்றும் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நிர்வாகிகள் அருணகிரி, ஆண்டவர், குமரவேல், கைத்தளாம்பிகை, விஜயலட்சுமி, செந்தில் குமார், கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாநில துணைத்தலைவர் தண்டபாணி ஒருங்கிணைத்தார்.


Next Story