வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்


வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்
x

நாட்டறம்பள்ளியில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியில் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் அட்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.சுரேஷ் வரவேற்று பேசினார். வேளாண்மை மற்றும் வேளாண்மை வணிகத்துறை துணை இயக்குனர் செல்வராஜ் பங்கேற்று துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் பட்டு வளர்ச்சி, கால்நடை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், விற்பனை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் துறைகளின் திட்டங்களை விவசாயிகளுக்கு விளக்கினர்.

முடிவில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் தினகரன் நன்றி கூறினார்.


Next Story