வட்டார அளவிலான தடகள போட்டி


வட்டார அளவிலான தடகள போட்டி
x

ஆலங்காயத்தில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர்

பள்ளி கல்வித்துறை சார்பில் வாணியம்பாடி வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் ஆலங்காயத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு திடலில் நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்புராயன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்தரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லப்பா, ஸ்ரீதர், சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வாணியம்பாடி வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வடசேரி, ராமநாயகன்பேட்டை, வெள்ளகுட்டை, பூங்குளம், மலைரெட்டியூர் பகுதிகளை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆலங்காயம் பிருந்தாவன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவன் வெற்றி மணிகண்டன் தனி நபர் சாம்பியன் பட்டத்தை பெற்றார், பரிசுகளை முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் வழங்கினார்.


Next Story