மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்


மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்
x

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தன.

திருச்சி

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் இளையோருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று காலை தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் திருச்சி பட்டாலியன் கமாண்டென்ட் ஆனந்தன், ஒலிம்பியன் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்-வீராங்கனைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜு, செய்தி தொடர்பாளர் நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அஜித்குமார் தங்கம் வென்றார். பெண்கள் பிரிவில் ஆனிஸ்மிலின் (400 மீட்டர் ஓட்டம்), வைஷாலி (வட்டுஎறிதல்), திரிஷா (குண்டு எறிதல்) முதலிடத்தை பிடித்தனர். 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஸ்ரீவத்சன் (உயரம் தாண்டுதல்), மணிகண்டனும் (800 மீட்டர் ஓட்டம்), பெண்கள் பிரிவில் மோஷிதா (ஈட்டி எறிதல்), மனோபிரியா (உயரம்தாண்டுதல்), கீதாஞ்சலியும் (800 மீட்டர் ஓட்டம்) தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றனர். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வினோத்ராஜும், பெண்கள் பிரிவில் அனுசியா (உயரம்தாண்டுதல்), ஆதனா (குண்டு எறிதல்), ஜனனி (நீளம்தாண்டுதல்) ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியின் முடிவில் தகுதிப் பெறும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும் மாநில போட்டியில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது மற்றும் கடைசி நாள் போட்டிகள் நடக்கின்றன.


Next Story