மாவட்ட அளவிலான கேரம் போட்டி


மாவட்ட அளவிலான கேரம் போட்டி
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் திண்டுக்கல் அரிமா சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள அரிமா மஹாலில் நடந்த இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கணைகள் பங்கேற்று விளையாடினர். போட்டிகள் ஒற்றையர் பிரிவு அடிப்படையில் சீனியர் ஆண், பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் பெலிக்ஸ், மணிபாண்டியராஜா, ஆனந்தபிரபு ஆகிய வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர்.


இதேபோல் பெண்கள் பிரிவில் ஏ.சத்யா, எம்.சத்யா, தனலெட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், மாவட்ட கேரம் சங்க சேர்மன் நாட்டாண்மை காஜாமைதீன் பங்கேற்று வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில் கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன், இணைச்செயலாளர் மருதமுத்து, திண்டுக்கல் அரிமா சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் மலைராஜன், போட்டி ஒருங்கினைப்பாளர் ஆல்வின் செல்வக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


1 More update

Next Story