திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்


திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்க இருப்பதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம், ஆவடி நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் டால்பின் நீச்சல் குளம் முகப்பேர் விளையாட்டரங்கத்தில் காலை 8 மணி முதல் கீழ்க்கண்ட முறைப்படி நடைபெற உள்ளது.

தடகளம் (பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவினர்களுக்கு) கூடைப்பந்து (பள்ளி மற்றும் கல்லூரி) கையுந்துபந்து (பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவினர்களுக்கு) திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டரங்கத்தல் 6-ந் தேதி நடக்கிறது.

இறகுபந்து (பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவினர்களுக்கு) மேசைப்பந்து (பள்ளி மற்றும் கல்லூரி) செஸ் (அரசு ஊழியர்கள்) மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கத்தில் 7-ந்தேதி நடைபெறும்.

கால்பந்து

கால்பந்து (பள்ளி மற்றும் கல்லூரி) கபடி (பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் பொது பிரிவினர்களுக்கு) மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கத்தில் 8-ந் தேதி நடக்கிறது.

சிலம்பம் (பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர்கள்) மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கத்தில் 10-ந் தேதி நடக்கிறது.

வலைக்கோல் பந்து (பள்ளி மற்றும் கல்லூரி) போட்டி ஆவடி நசரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12-ந் தேதி நடக்கிறது. நீச்சல் (பள்ளி மற்றும் கல்லூரி) போட்டி முகப்பேரில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் டால்பின் நீச்சல் குளத்தில் 13-ந் தேதி நடக்கிறது.

கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டி (பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர்கள்) மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கத்தில் 14-ந் தேதி நடக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு (தடகளம் இறகுப்பந்து எரிபந்து கபடி மற்றும் கையுந்துபந்து) மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டரங்கத்தில் 15-ந் தேதி நடக்கிறது.

மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர் வீராங்கனைகள் மேல்கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்த நகல் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை நகல், அரசு ஊழியர்களின் அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்கள் ஆதார் நகல் ஆகியவற்றுடன் சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை சந்தித்து தங்கள் வருகையை பதிவு செய்திட அறிவுறுத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story