மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி


மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
x

ராணிப்பேட்டையில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ராணிப்பேட்டை மாவட்ட பாரம்பரிய சிலம்ப கழகத்தின் சார்பில் இரண்டாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. 11 வயதுக்குட்பட்டவர்கள், சப்ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

தனித்திறமை, வாள்வீச்சு, மான்கொம்பு, சுருள் வாள் வீச்சு போன்ற விளையாட்டுகளை, தி.மு.க. மாநில சுற்றுசூழல் அணி துணைசெயலாளர் வினோத்காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொடங்கி வைத்ததோடு, வெறறிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் வாழ்த்துரை வழங்கினார். நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், மாவட்ட பாரம்பரிய சிலம்பம் கழகத்தின் தலைவர் அசோக்குமார், செயலாளர் செமின்ராஜ், துணை செயலாளர் தமிழரசு, பொருளாளர் மனோகரன், சர்வதேச சிலம்ப கழக தலைவர் சந்தோஷ்குமார், விளையாட்டு ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


Next Story