மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி


மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி
x

மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நடந்தது.

திருச்சி

மாவட்ட அளவிலான 14-வது சப்-ஜூனியர் ஹேண்ட்பால் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 2 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 பள்ளி அணிகளும், பெண்கள் பிரிவில் 15 பள்ளி அணிகளும் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளான நேற்று லீக் முறையில் போட்டிகள் நடந்தன. இதில் ஒவ்வொரு அணியும் 3 அணிகளுடன் விளையாட வேண்டும். போட்டிகளின் முடிவில் இரு பிரிவிலும் முறையே முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறும். அதன்படி நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.வி., கே.கே.நகர் அரசு பள்ளி, எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிக், ஏ.கே.கே.வி. பள்ளி அணிகளும், பெண்கள் பிரிவில் எஸ்.பி.ஐ.ஓ.ஏ மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., லால்குடி புதூர் அரசு பள்ளி, செயின்ட் ஜோசப் பள்ளி அணிகளும் முதல் 4 இடங்களை பிடித்து சூப்பர் லீக் சுற்றுக்கு முன்னேறின. இன்று (சனிக்கிழமை) சூப்பர் லீக் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்க செயலாளர் செய்துள்ளார்.


Next Story