வடுவூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி


வடுவூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடுவூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

திருவாரூர்

வடுவூர் விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு போட்டிகள் 'நாக்-அவுட்' முறையிலும், பெண்கள் பிரிவு போட்டிகள் 'லீக்' முறையிலும் நடந்தது. ஆண்கள் பிரிவில் வடுவூர் புதுக்கோட்டையை சேர்ந்த புதுகை நண்பர்கள் பி அணி முதல் இடத்தையும், புதுகை நண்பர்கள் ஏ அணி 2-ம் இடத்தையும் பிடித்தன. பரவாக்கோட்டை வானவில் கபடி குழு 3-ம் இடத்தையும், கட்டக்குடி விளையாட்டு கழக அணி 4-வது இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் கட்டக்குடி விளையாட்டு கழக அணி முதலிடத்தையும், மன்னார்குடி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடத்தையும், கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அணி 3-வது இடத்தையும் பெற்றன. சூரனூர் அரசு உயர்நிலைப் பள்ளி அணி 4-வது இடம் பிடித்தது. பரிசளிப்பு விழாவுக்கு திருவாரூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ராசராசேந்திரன் தலைமை தாங்கினார். கோவை ஈஷா யோக மைய நிர்வாகி தவ மோளா வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம், பரிசுத்தொகை, சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் பொன்கோவிந்தராசு, அசோகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலசுந்தரம், பாமா, ரம்யாநெடுஞ்செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர் விஜய், வடுவூர் விளையாட்டு அகடாமி செயலாளர் அக்ரி.சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story