மாவட்ட அளவிலான கபடி போட்டி

சிவகாசி அருகே மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி மாநகர தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான கபடி போட்டி திருத்தங்கல் கண்ணகி காலனியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 44 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர்கள் அழகு மயில் பொன்சக்திவேல், சேவுகன், ம.தி.மு.க. கவுன்சிலர் ராஜேஷ், பகுதி செயலாளர் மாரீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசை கண்ணகி காலனி செல்லையா நினைவு கபடி குழுவினர் பெற்றனர். முதல் 8 இடங்களை பெற்ற அணிகளுக்கும் பள்ளப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் உசிலை செல்வம் நினைவு சுழற்கோப்பையை அவரது மகன் உசிலை தங்கராம் வழங்கினார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாநகர செயலாளர் உதய சூரியன், மாநில நிர்வாகியும், முன்னாள் யூனியன் தலைவருமான வனராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் சபையர் ஞானசேகரன், மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் வெயில்ராஜ், சேதுராமன், பொன்மாடத்தி, மைக்கேல், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பிரதிநிதி கருப்பசாமி மற்றும் மாநகர தி.மு.க. நிர்வாகிகள் செய்திருந்தனர். செந்தில்குமார், முரளி, பால்காமராஜ், பாண்டி ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.






