மாவட்ட அளவிலான கபடி போட்டி


மாவட்ட அளவிலான கபடி போட்டி
x

மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஊராட்சியை சேர்ந்த கீழத்தாயில்பட்டியில் செல்லியாரம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் விருதுநகர், சிவகாசி, தூத்துக்குடி, சாத்தூர், முத்தாலநாயக்கன்பட்டி, தாயில்பட்டி, கீழதாயில்பட்டி செல்லியாரம்மன் கபடி குழு உள்ளிட்ட 60 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப்போட்டியில் கீழதாயில்பட்டி செல்லியாரம்மன் கோவில் அணியினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ஊர் நாட்டாமை ரவீந்திரன், சக்தி மூர்த்தி, மகேந்திரன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.


Next Story