கடலூரில், மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி


கடலூரில், மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி
x

கடலூரில் மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

கடலூர்

கடலூர் மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் திறமைகளை செய்து காண்பித்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 42 மாணவ-மாணவிகள் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை), 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விழுப்புரத்தில் நடைபெறும் மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாநில தலைவர் ஜனார்த்தனன், கடலூர் மாவட்ட மல்லர் கம்ப கழக தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் ஓம் பிரகாஷ் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். இதில் உடற்கல்வி இயக்குனர் அசோகன், செயலாளர் கார்த்திக், இணைச்செயலாளர் பாபு, பயிற்சியாளர்கள் கோபி, புருஷோத்தமன், கிரிஜா, பொருளாளர் மணிபாலன் மற்றும் பெரியார் கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.


Next Story