மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி


மாவட்ட அளவிலான சிலம்ப   போட்டி
x

தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 650 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் தூத்துக்குடி வீரத்தமிழன் போர்க்கலை சிலம்பக்கூடம் சார்பில் 96 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒற்றை கம்பு தனித்திறமை, இரட்டை கம்பு தனித்திறமை மற்றும் தொடுதிறமை ஆகிய மூன்று போட்டி பிரிவிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த சிலம்பம் தேசிய பயிற்சியாளரும், வீரத்தமிழன் போர்க்கலை சிலம்ப கூட தலைமை பயிற்சியாளருமான ஆசான் ஆ. சுடலைமணி, மற்றும் பயிற்சியாளர்களை பெற்றோர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


Next Story