மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
அரியலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் இந்த போட்டிகளில் வருவாய் குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். நேற்று மாணவிகளுக்கான ஆக்கி, கால்பந்து, எறிபந்து, இறகுபந்து, டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் மேற்பார்வையில், உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story