மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி


மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி
x

கரூரில் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி நடைபெற்றது.

கரூர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரூர் வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதற்கு வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இப்போட்டியில் கரூர், அரவக்குறிச்சி, தாந்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியானது 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். இப்போட்டிகளில் முதலிடம் பெறும் அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story