மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்


மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம்
x

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் நடந்தது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் இன்று நடந்தது.

மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் வேதநாயகம் வரவேற்றார்.

கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ரூ.21 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் ஊராட்சி அலுவலகத்தில் கழிவறை பழுதுபார்த்தலுக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story